முகப்பு
தமிழ்நாடு

அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் டி1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
டி1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
பகிர்:

சென்னை ஆவடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் டி1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட திருமுல்லைவாயல் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை, கடனுதவி ஆகியவற்றை வழங்கினார். 

இதையடுத்து நரிக்குறவ மாணவி திவ்யாவின் வீட்டிற்குச் சென்று காலை உணவு மற்றும் தேநீர் அருந்தினார். பின்னர் நரிக்குறவ மக்கள் மத்தியில் உரையாற்றினார். 

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் டி1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வழக்குகளின் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.