தமிழ்நாடு

சேலம் மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

DIN

சேலம் மாநகராட்சியில் பல ஆண்டு காலமாக ஒரே வார்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை மாறுதல் செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், இல்லையெனில் மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தெரிவிப்பதாகக் கூறி இன்று சேலம் மாநகராட்சி அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பல ஆண்டு காலமாக ஒரே வார்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை மாறுதல் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது

இதன்படி, சேலம் கொண்டலாம்பட்டி மாநகராட்சிமண்டலத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை பணி மாறுதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ஏற்கனவே சேலம் மாநகராட்சி ஆணையரை சந்தித்து துணி பணியாளர்கள் புகார் மனு ஒன்றையும் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், இல்லையெனில் மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தெரிவிப்பதாக கூறி இன்று திங்கள்கிழமை சேலம் மாநகராட்சி அலுவலகத்தை  தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், அதிகாரியை கண்டித்து லஞ்சம் கேட்கும் ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து தூய்மைப் பணியாளர் சீனிவாசன் கூறும்போது: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருவதாகவும், தற்போது ஒரே இடத்தில் பல ஆண்டு காலம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை மாறுதல் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அடிப்படையில் தங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தெரிவித்தனர். லஞ்சம் கொடுக்க மறுக்கும் தூய்மைப் பணியாளர்களை மாறுதல் செய்யாமலும் ஊதிய உயர்வு வழங்காமல் அதிகாரிகள் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், கடைநிலை பணியாளர்களாகிய தூய்மைப் பணியாளர்களிடம் லஞ்சம் கேட்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியவர், கீழ்நிலை முதல் மேல்நிலை வரை உள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்பது சேலம் மாநகராட்சியில் தொடர் வாடிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅவர் கேட்டுக்கொண்டார். மாநகராட்சி அதிகாரி மீது லஞ்ச புகார் குறித்து தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT