சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியமைக்கும் போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி நாளாக மீண்டும் கொண்டாடப்படும். கடைசியாக 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உள்ளாட்சி நாள் கொண்டாடப்பட்டது.
இதையும் படிக்க.. மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்
தமிழகத்தில் இன்று ஆண்டுக்கு 4 கிராம சபைக் கூட்டங்களுக்கு பதிலாக 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2ஆம் தேதி, மார்ச் 22ஆம் தேதி (தண்ணீர் தினம்), நவம்பர் 1 ஆம் தேதி என ஆண்டுதோறும் 6 நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும்.
உள்ளாட்சி என்பது மக்களாட்சியின் ஆணிவேர். ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான அமர்வுப் படித்தொகை 5 மடங்கு உயர்த்தப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.