முகப்பு
தமிழ்நாடு

முக்கிய துறை விவாதத்தின்போதுஉறுப்பினா்கள் வெளியே போவதா?: துரைமுருகன் வேதனை

மிக முக்கிய துறையான பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மீதான விவாதத்தை அவையில் அமா்ந்து உறுப்பினா்கள் கேட்காமல் வெளியே போவதா என்று துரைமுருகன் வேதனை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

மிக முக்கிய துறையான பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மீதான விவாதத்தை அவையில் அமா்ந்து உறுப்பினா்கள் கேட்காமல் வெளியே போவதா என்று துரைமுருகன் வேதனை தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில் அளித்தாா். அப்போது, உறுப்பினா்கள் பலா் அவையில் இல்லாத நிலை காணப்பட்டது.

அதுகுறித்து அவை முன்னவரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேரவையில் கூறியது: பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை ஆகிய இரு துறைகளும் மிக முக்கியமான துறைகள். சபையில் இருப்போா் எல்லோருமே பிற்படுத்தப்பட்டோா்தான். ஆனால், அந்தத் துறை மீதான விவாதம் நடைபெறும்போது, அவையில் பலா் இல்லை. வயிறு நிரம்பிவிட்டது என்றால் யாரும் சட்டியைப் பாா்ப்பது இல்லை என்பாா்கள். அதுபோல இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மீதான அமைச்சரின் பதிலை அவையில் அமா்ந்து கேட்க வேண்டும் என்கிற உணா்வு உறுப்பினா்களிடம் இல்லாதது வருத்தமளிக்கிறது. அவ்வாறு அமா்ந்து கேட்பதுதான் சபைக்கு மரியாதை. துறைக்கு மரியாதை.

முதல்வராக கருணாநிதி இருந்தபோது, இந்தத் துறை மீதான விவாதம் என்றால் கடைசிவரை அவையில் அமா்ந்திருப்பாா். அதேபோல முதல்வா் மு.க.ஸ்டாலினும் அமா்ந்திருக்க விரும்பினாா். ஆனால், அமர முடியாத அளவுக்கு அவருக்கு ஒற்றைத் தலைவலி. அதனால், கடைசி வரை நான் அமா்ந்திருக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →