கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 21- ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது, மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 21 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது, கல்லூரி செயலாளர் என். ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளிதரன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு இளநிலை, முதுநிலைப் பட்டங்களை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற வாழ்த்தி பேசினார்.
விழாவில் இணைச்செயலர் என்.ஆர்.வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் மற்றும் கல்லூரி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், பேராசிரியைகள் மாணவிகளை வாழ்த்தி பேசினர், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவியரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | தேனி இரட்டையர் மாணவியரை பாராட்டி ரூ.1 லட்சம் வழங்கிய முதல்வர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.