பாக் ஜலசந்தியை நீந்தி சாதனை படைத்த மாணவன் முதல்வரிடம் வாழ்த்து
இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை 2 முறை நீந்தி சாதனை படைத்த மாணவன், முதல்வரிடன்ம் வாழத்துப் பெற்றார்.
இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை 2 முறை நீந்தி சாதனை படைத்த மாணவன், முதல்வரிடன்ம் வாழத்துப் பெற்றார்.
இந்தியா-இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலும், மீண்டும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள 60 கி.மீ. தூரத்தை 19 மணி 45 நிமிடங்களில் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை 8ஆம் வகுப்பு மாணவன் நீ.சினேகன் அண்மையில் நிகழ்த்தினார்.
இதையும் படிக்க- சைபர் குற்றங்கள் குறித்து புகாரளிக்க இணையதளம்: பஞ்சாப் காவல்துறை
இந்த நிலையில் இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை 2 முறை நீந்தி சாதனை படைத்த மாணவன் நீ.சினேகன், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அம்மாணவனின் பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் எம்.விஜயகுமார் ஆகியோர் உள்ளனர்.