தமிழ்நாடு

தேர் விபத்து: தமிழக பேரவையில் இன்று கவனஈர்ப்பு தீர்மானம்

DIN

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்து குறித்து தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் இன்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்ய செல்வதால், கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ. 5 லட்சம் வழங்கவும், காயமடைந்த 15 பேருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT