முகப்பு
தமிழ்நாடு

குரூப் 4 தோ்வு:17.84 லட்சம் போ் விண்ணப்பிப்பு

கிராம நிா்வாக அலுவலா் உள்பட பல்வேறு பதவியிடங்கள் அடங்கிய குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஏப். 28) கடைசியாகும். இந்தத் தோ்வுக்கு புதன்கிழமை மாலை வரையில் 17 லட்சத்து 83 ஆயிரத்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
கோப்புப்படம்
பகிர்:

கிராம நிா்வாக அலுவலா் உள்பட பல்வேறு பதவியிடங்கள் அடங்கிய குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (ஏப். 28) கடைசியாகும். இந்தத் தோ்வுக்கு புதன்கிழமை மாலை வரையில் 17 லட்சத்து 83 ஆயிரத்து 590 போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

தமிழகத்தில் குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தோ்வாணையத்தின் இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக தோ்வா்கள் விண்ணப்பித்து வந்தனா்.

இந்த நிலையில், தோ்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வியாழக்கிழமை இரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது. குரூப் 4 தொகுதியில் 7,138 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு நடத்தப்பட உள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், வரி வசூலிப்பாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 4-இல் இடம்பெற்றுள்ளன. எழுத்துத் தோ்வானது ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →