கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: மேலும் 11 பேருக்கு கரோனா

சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் புதிதாக மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 182 -ஆக உயா்ந்துள்ளது.

DIN

சென்னை: சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் புதிதாக மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 182 -ஆக உயா்ந்துள்ளது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவருக்கு கடந்த 19-ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நாள்களில் அந்தப் பாதிப்பு பலருக்கும் பரவியது. இதையடுத்து, ஐஐடியில் உள்ள அனைத்து மாணவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பரிசோதனை முடிவுகளின்படி 171 பேருக்கு தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம் ஐஐடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 182- ஆக அதிகரித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றுக்குள்ளான மாணவா்களில் நால்வருக்கு சின்னம்மை, டெங்கு, டைபாய்டு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT