இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள்(படம்: டிவிட்டர்) 
தமிழ்நாடு

தேர்தல் ஆணையக் கூட்டம் தொடங்கியது: அருகருகே இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

தமிழக தேர்தல் ஆணையக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

DIN

தமிழக தேர்தல் ஆணையக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. இப்பணியை திறம்பட மேற்கொள்வது குறித்து, மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக தரப்பில் முதல் ஆளாக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூட்ட அரங்கிற்கு வந்தார்.

இதையும் படிக்க | வாக்காளா் பட்டியல்-ஆதாா் எண் இணைப்பு இன்று தொடக்கம்: தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலோசனை

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, கோவை செல்வராஜ் முன்பு இருந்த அதிமுக பெயர்ப் பலகையை எடுத்த ஜெயக்குமார், தங்கள் இருக்கை முன்பு வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், திமுகவிலிருந்து ஆர்.எஸ். பாரதி, பரந்தாமன், காங்கிரஸிலிருந்து தாமோதரன், நவாஸ், பாஜகவிலிருந்து கரு. நாகராஜ், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT