தமிழ்நாடு

மாணவி உடற்கூறாய்வு அறிக்கை: ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு 

கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

DIN

கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ஆம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். 

உடல் கூறாய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவிக்கவே, மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். மேலும், இரண்டு முறை உடல் கூறாய்வு செய்யும் விடியோக்களையும் மருத்துவக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தகுந்த தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்வதற்காக இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளை சிபிசிஐடி போலிஸ் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

SCROLL FOR NEXT