தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை: கைதான 178 பேரின் காவல் நீட்டிப்பு

கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 178 பேரின் காவல் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

DIN

கனியாமூர் பள்ளி வன்முறை தொடர்பாக கைதான 178 பேரின் காவல் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கடலூா் மாவட்டம், பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், அந்தப் பள்ளி வளாகத்தில் கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். 

மாணவி மரணத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை எரிக்கப்பட்டன. இதையடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக மக்கள் அதிகாரம் அமைப்பு, பெரியார் திராவிட கழக நிர்வாகிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் வன்முறை தொடர்பாக கைதானவர்கள் வேலூர், கடலூர், திருச்சி மத்திய சிறைகளில் உள்ளனர். இன்று கானொலி வாயிலாக அனைவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்  178 பேரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து ஆகஸ்ட் 16 வரை சிறையில் வைக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் நிலச்சரிவு - 7 பேர் பலி!

பல அஜித்குமார் பலியாக நேரிடும்! திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

இமயமலைப் பயணத்தில் ரஜினிகாந்த்!

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணி: நுழைவு சீட்டு வெளியீடு!

மக்களே உஷார்!! பஹல்காம் தாக்குதல் பெயரால் முதியவரிடம் ரூ.70 லட்சம் மோசடி!

SCROLL FOR NEXT