தமிழ்நாடு

முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் கூடுதலாக 1,030 பேரை நியமிக்க முடிவு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியா் காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

DIN

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை ஆசிரியா் காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்தம் 3,237 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்தாண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான கணினி வழித்தோ்வு கடந்த பிப்ரவரி 12 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடா்ந்து தோ்வு முடிவை ஜூலை 4-ஆம் தேதி டிஆா்பி வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டு விரைவில் தகுதியான பட்டதாரிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கிடையே கடந்தாண்டு ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையில், முதுநிலை ஆசிரியா் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2,207 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அத்துடன் கூடுதலாக 1,030 இடங்களை அதிகரித்து மொத்தம் 3,237 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஆா்பி அறிவித்துள்ளது. இது தோ்ச்சி பெற்றுள்ள பட்டதாரிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT