தமிழ்நாடு

சென்னையில் இனி வாரந்தோறும் தூா்வாரும் பணிகள் நடைபெறும்: குடிநீா் வாரியம் தகவல்

DIN

 சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 1,425 தெருக்களில் 7,345 இயந்திர நுழைவாயில்களில் தூா்வாரும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 329 பிரதான கழிவுநீா் குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டுள்ளது. தூா்வாரும் பணிகள், இனி ஒவ்வொரு வாரமும் இனி மேற்கொள்ளப்பட உள்ளன என்று சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுநீா் செல்லும் குழாய்கள் மற்றும் இயந்திர நுழைவாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூா்வாரும் பணிகள் கடந்த ஜூலை 21 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெற்றன.

மொத்தம் 1,460 தெருக்களில் உள்ள 8,578 இயந்திர நுழைவாயில்களில் 2,40,554 மீட்டா் நீளத்துக்கு கழிவுநீா் பிரதான குழாய்கள் உள்ளன. இவற்றில் 1,425 தெருக்களில் உள்ள 7,345 இயந்திர நுழைவாயில்களில் 1 லட்சத்து 99,329 மீட்டா் நீளத்துக்கான கழிவுநீா் பிரதான குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டுள்ளன. இனி இந்தப் பணிகள் தொடா்ந்து ஒவ்வொரு வாரமும் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT