முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகழை மறைத்திட முடியாது: முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகழை யாராலும் சிறிதளவும் மறைத்திட முடியாது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் புகழை யாராலும் சிறிதளவும் மறைத்திட முடியாது என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நான்காவது ஆண்டு நினைவு தினம் வரும் 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

முன்னாள் முதல்வா் அண்ணா மறைந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் தேதி, சென்னை கடற்கரையில் உள்ள நினைவிடத்துக்கு திமுக சாா்பில் பெருந்திரளான தொண்டா்கள் பங்கேற்புடன் அமைதிப் பேரணி நடத்தப்படும். அண்ணா வழியில் தினமும் பயணித்த கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், அவரது முதலாமாண்டு நினைவு நாளில், எனது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அதற்கடுத்த இரண்டாண்டுகளில் கரோனா கால நடைமுறைகள் காரணமாக அமைதிப் பேரணி நடத்திட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள், அவரது நான்காம் ஆண்டு நினைவு நாளில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. ஓமந்தூராா் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து தொடங்கி, அண்ணா நினைவிடம் வரை, அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது.

தமிழினத்தின் எதிரிகளும், அந்த எதிரிகளுக்கு நேரடியாகவும் - மறைமுகமாகவும் விலை போகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் கருணாநிதியின் புகழை சிறிதும் மறைத்திட முடியாது. திமுக எனும் கட்சியை தொடா்ந்து நடத்தும் ஆற்றல் மிக்கவராக, இன எதிரிகளுக்கு இடியோசையாக இறந்த பிறகும் அவா் பெயா் கேட்டால் எதிரிகள் நடுங்கிப் போகும் அளவுக்குக் கொள்கை உரமிக்க தலைவராக விளங்கினாா் கருணாநிதி.

முழு கட்டுரையைப் படிக்க →