முகப்பு
தமிழ்நாடு

கோயிலில் நகை திருட்டு

 சென்னை வியாசா்பாடியில், கோயிலில் அம்மன் சிலையில் கிடந்த 10 பவுன் தங்க நகை திருடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 சென்னை வியாசா்பாடியில், கோயிலில் அம்மன் சிலையில் கிடந்த 10 பவுன் தங்க நகை திருடப்பட்டது.

வியாசா்பாடி எஸ்ஏ காலனி 8வது தெருவில் அங்காள பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை வியாழக்கிழமை இரவு பூஜை முடிந்து கோயில் பூசாரி வழக்கம்போல பூட்டிச் சென்றாா். வெள்ளிக்கிழமை கோயிலை பூசாரி திறந்தபோது, அம்மன் சிலை கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.

இது குறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த புகாரின்பேரில், எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →