ராமேஸ்வரத்தில் நாளை மீன்பிடிக்க அனுமதியில்லை
ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
5.8.2022 அன்று குமரிமுனை, மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க- குறைந்தபட்ச ஆதார விலையை மேம்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது: வேளாண் அமைச்சர்
Advertisement
Advertisement
இதன்காரணமாக ராமேஸ்வரம், பாம்பன் பகுதி விசைப்படகுகளுக்கு நாளை மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்படாது என்று மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாட்டுப்படகு மீனவர்களும் நாளை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், அதி கனமழைப் பொழிவு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களின் கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.