தமிழ்நாடு

போடியில் வரலட்சுமி விரதம்: 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம்

போடியில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

DIN

போடி: போடியில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

ஆடி மாதம் வரலட்சுமி விரத தினத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம் செய்து பூஜை நடத்துவர். போடி அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு 50 ஆயிரத்து ஒரு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

அம்மன், பந்தல், நிலை மாலை, திருவாச்சி ஆகியவை வளையல்களால் அமைக்கப்பட்டிருந்தன. சுமங்கலிகள் நீண்ட ஆயுள் பெறவும், திருமணமாகாத பெண்கள் திருமணமாகவும், குழந்தை பாக்கியம் பெறவும் பெண்கள் வளையல் படைத்து பூஜையில் பங்கேற்றனர்.

அம்மனுக்கு திருமஞ்சனம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் , தாலி கயிறு, வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT