முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்குச் செல்லும் உபரி நீர்  
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து  இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு 

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால், இடுக்கி அணைக்கு உபரி நீர் விநாடிக்கு, 2,228 கன அடியாக அதிகரிப்பு செய்து சனிக்கிழமை திறந்து விடப்பட்டது.

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால், இடுக்கி அணைக்கு உபரி நீர் விநாடிக்கு, 2,228 கன அடியாக அதிகரிப்பு செய்து சனிக்கிழமை திறந்து விடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்வை கட்டுப்படுத்த ரூல் கர்வ் நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது. இரண்டாவது நாளான சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் விநாடிக்கு, 2,228 கன அடியாக வெளியேற்றப்பட்டது.

சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம்,138.10 அணியாகவும் (மொத்த உயரம் 142 அடி), அணையில் நீர் வரத்து விநாடிக்கு, 5,285 கன அடியாகவும், இருந்தது, அணையில் ,6,640.20 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. பெரியாறு அணையில் 12.4 மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 11.6 மி.மீ., மழையும் பெய்தது.

அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு ,2,122 கன அடி தண்ணீரும், நீர் வழிபோக்கிகள் மூலம் இடுக்கி அணைக்கு உபரி நீர் விநாடிக்கு, 2,228 கன அடியாக திறந்து விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக யூத் வில்வித்தை: 2 தங்கம் வென்றது இந்தியா

என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முடியாது: முன்னாள் முதல்வா்!

இரவு நேர வாகன சோதனைக்காக ஒளிரும் வேகத்தடுப்பான்கள்!

ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை: கி. வீரமணி

உடல் எடை குறைப்பு குறித்த தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT