லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் வீடு. 
தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினம், நகர செயலாளருமான கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றன

DIN

நாமக்கல்: நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினம், நகர செயலாளருமான கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2011 முதல் 2016 வரையில், 2016 முதல் 2021 வரையிலும் நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கே.பி.பி பாஸ்கர். இவர் பத்தாண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மீது புகார் எழுந்தது. 

லஞ்ச ஒழிப்புத் துறையினர்

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற நிலையில் பல்வேறு அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். அந்த வரிசையில் நாமக்கல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெறும் என்ற தகவல் வெளியாகி வந்தது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில்  பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாஸ்கரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

இது குறித்த தகவல் அறிந்த அதிமுகவினர் அவருடைய வீட்டின் முன்பாக திரண்டுள்ளனர். இதையடுத்து அங்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக முன்னாள் பேரவை உறுப்பினர் ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடங்கி இருக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்த புகாரில் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து சோதனை நடத்து வருவதாக கூறப்பகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT