முகப்பு
தமிழ்நாடு

‘பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகள்’: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
‘பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகள்’: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பகிர்:

பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை திருமங்கலம் புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் உடலுக்கு அரசு சார்பில் செய்யப்பட்ட மரியாதை நிகழ்வில் பாஜக- திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீரமரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டபோது பாஜகவினர் அவரது காரை முற்றுகையிட்டு காலணியை வீசி கோஷ்மிட்டனர். இந்த சம்பவத்திற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்யும் நாள் இது. இரண்டு நாள்களாக காத்திருக்கிறோம். முதல்வர் அறிவுரையில் தினமும் பலமுறை தொடர்பு கொண்டு இன்று அவருக்கு மரியாதை செய்திருக்கிறோம். பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகளிடம் பேச்சுவார்த்தை வைப்பதற்கு இது சரியான தருணம் இல்லை. நாளை பேசுவோம்” எனக் குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →