தமிழகத்தில் புதிதாக 670 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 670 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 129 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 670 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 129 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 670 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,59,491-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,033 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Advertisement
இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,15,220-ஆக உயர்ந்துள்ளது.