நிதியமைச்சர் கார் மீது காலணி வீச்சு: 3 பெண்களுக்கு ஆக.30 வரை சிறை
மதுரையில் நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் கைதான 3 பெண்களை ஆக.30 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரையில் நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் கைதான 3 பெண்களை ஆக.30 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது திமுக மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்து திரும்பிச் சென்றபோது நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனின் காா் மீது பாஜகவினா் காலணியை வீசினா். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாகைகுளத்தில் பதுங்கியிருந்த சரண்யா, தனலட்சுமி, தெய்வானை ஆகியோரை கைது செய்தது தனிப்படை காவல்துறை.
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்ட 3 பெண்கள் மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நீதிபதி சந்தகுமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.