தமிழ்நாடு

16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யுமாம்: எங்கெல்லாம்?

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு காரணமாக, 

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 நேரத்தில் அதிகபட்சம் திண்டுக்கல் 10 செ.மீ,, ஆர்எஸ் மங்கலம் 9, கொள்ளிடம் 7, பரங்கிப்பேட்டை, தொண்டி, ஜெயம்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் தலா 6 செ.மீ  மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கு

தெற்கு வங்கக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

வட ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

SCROLL FOR NEXT