தமிழ்நாடு

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா நகரில் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் பார்வையிட்டார். அப்போது பேட்மிட்டன் விளையாடிய அவர், மக்களுடன் சுயபடமும் எடுத்துக்கொண்டார். காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எனக்கு கரோனா வந்தபோது பெரிதாக பாதிப்பு வராமல் போனதற்கு உடற்பயிற்சியே காரணம். எனக்கு 70 வயது ஆகிறது. ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன், தம்பிபோல இருப்போம் என்றார். 

குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்றுகிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை "ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்" நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது சாலையில் 3 மணி நேரத்திற்கு முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு விளையாட்டு, பாட்டு, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT