வருஷாபிஷேகம் நிறைவடைந்த பின் ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கு  சிறப்பு தீபாராதனை  (ஆரத்தி) நடைபெற்றது. 
தமிழ்நாடு

பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேக விழா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகில் உள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

DIN


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகில் உள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

ஸ்ரீசீரடி சாய்ப்பா கோவிலின் 5 ஆம் ஆண்டு வருஷாபிஷேவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக திரளான பெண்களால் பால்குடம் எடுத்துவரப்பட்டு ஸ்ரீடிசாய்பாபாவின் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வேள்வி பூஜை நடைபெற்று மந்திர ஜபம் ஏற்றப்பட்ட புனித நீரால் பாபாவிற்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்னர், நடைபெற்ற மத்தியான ஆரத்தியில் தீபதூப ஆராதனைகள் நடைபெற்றன. 

வழிபாட்டு நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. சுமார் 2000ற்கு மேற்பட்ட பக்தர்கள் விழாவில் நேரில் கலந்து கொண்டு பாபாவை வழிபட்டனர்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், கோயிலின் நிறுவனரும் தொழிலதிபருமான சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT