தமிழ்நாடு

36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள்: இதுதான் சட்டம்-ஒழுங்கா? இபிஎஸ்

DIN

சென்னை: 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதுதான் சட்டம்-ஒழுங்கை கவனித்துக் கொள்வதா என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:

தமிழக முதல்வர், விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், இன்று தமிழகம் கொலைக் களமாக மாறி வருகிறது. முதல்வரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் காவல்துறை செயலிழந்து கிடக்கிறது.

கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. சட்டம்-ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைகவனித்துக் கொள்வதா?

திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT