தமிழ்நாடு

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுகுட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக இணைந்தார். 

DIN

அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுகுட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக இணைந்தார். 

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் புதன்கிழமை மாலை பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலர் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. 

இதில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ஆறுகுட்டி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

2011ஆம் ஆண்டு கோவை கவுண்டம்பாளையும் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறுகுட்டி அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT