கோப்புப்படம் 
தமிழ்நாடு

'என் உயிர் இருக்கும் வரை  உழைப்பேன்': முதல்வர் மு.க.ஸ்டாலின்

என் உயிர் இருக்கும் வரை  உழைப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

பெருந்துறை: என் உயிர் இருக்கும் வரை  உழைப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெருந்துறையில் ரூ.167.5 கோடியில் 63,858 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்   வழங்கினார். பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையில் உரையில் தெரிவித்ததாவது:

வரலாற்று பெருமை கொண்ட ஊர் பெருந்துறை. பெருந்துறை  அருகே தமிழ்ச்சங்கம் செயல்பட்டதாக செப்பேடு சொல்கிறது. ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்துக்கு செய்யப்பட்டுள்ளன. 

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். பெருந்துரை அரசு மருத்துவமனையில் 261 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  ஈரோடு மாவட்டத்தில் 2 பேருந்து நிலையங்கள் அமைக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை எல்லாவற்றிலும் முதன்மை மாவட்டமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . ஈரோடு மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்க ரூ.16 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

என் உயிர் இருக்கும் வரை  உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை. இருக்கும் புகழே எனக்கு போதும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

SCROLL FOR NEXT