தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை

DIN

நாகப்பட்டினம்: நாகை வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியதாகும்.

இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் ஆண்டுப்பெருவிழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டின் ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.

கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்க இயலாததால், நிகழாண்டின் கொடியேற்றத்தில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் வேளாங்கண்ணி வந்துள்ளனர். இதனால், வேளாங்கண்ணி முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளன.

இதையொட்டி, வேளாங்கண்ணி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார்  2,000 காவல்துறையினர் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர், பயணிகளின் உடைமைகளை ஸ்கேன் செய்த பிறகே ஆலயத்திற்குள் அனுமதிக்கின்றனர். மெட்டல் டிடெக்டர் உதவியுடன் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே சார்பில், பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி பேராலயம் வரும்  பக்தர்களை எண்ணிக்கையைக் கணக்கீடு செய்யும் கருவி முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. 27 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஐந்து இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் கடலில் பாதுகாப்பு கயிறு கட்டப்பட்டு குறிப்பிட்ட எல்லைக்குள் குளிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT