ரூ.15 லட்சம் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் ஏலேலசிங்க விநாயகர் கோயில் 
தமிழ்நாடு

காஞ்சிபுரம் ஏலேலசிங்க விநாயகர் கோயிலில் ரூ.15 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.15 லட்சம் நோட்டுகளால் சன்னதி கருவரை அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. 

DIN

காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.15 லட்சம் நோட்டுகளால் சன்னதி கருவரை அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேலசிங்க விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை முழுவதும் அலங்காரம் செய்யப்படும். பின் பொதுமக்கள் வழிபட்டு செல்வர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஏலேலசிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின் காலையில், 10, 20, 50, 100, 200, 500, 2000, ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை முழுவதும் அலங்கரிக்கப்பட்டன

பின்னர் ,பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. இந்த ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்ய பட்டுள்ளதை பார்ப்பதற்கு ஏராளமாணோர் சென்றனர்.

இது குறித்து கோயில் நிர்வாகத் தலைவர் குப்புசாமி கூறுகையில், முதலாம் ஆண்டு ரூபாய் நாணயங்களால் அலங்காரம் செய்தோம். பின் ரூபாய் நோட்டுகளால் கருவரை முழுவதும் அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம். இந்த ஆண்டு 15-ஆம் ஆண்டு என்பதால் நண்பர்கள் மூலம் ரூ. 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்காரம் செய்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT