தமிழ்நாடு

விளம்பரத்துக்காக அறப்போா் இயக்கம் குற்றச்சாட்டு: உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம்

DIN

தமது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், விளம்பரத்துக்காகவும் அறப்போா் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த 2019 முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூா், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக, தலைமைச் செயலா், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போா் இயக்கத்தின் சாா்பில் ஜூலை 22-ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டது.

நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் அமைப்பதற்காக இந்த ஒப்பந்தத்தில் சோ்த்து திட்ட மதிப்பு அதிகப்படுத்தப்பட்டது. இதனால், அரசுக்கு ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடா்பாக வெளியான செய்தியை அறப்போா் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டது.

இதனால், தனக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளா் ஜாகிா் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடா்ந்துள்ளாா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வழக்குரைஞா் ‘எதன் அடிப்படையில் ஒப்பந்தம் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் அறப்போா் இயக்கம் தலையிட முடியாது.

ஒரு நிறுவனத்துக்கு ஆதரவாக ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அந்த நிறுவனமே ஒப்பந்தத்தில் கலந்துகொள்ளவில்லை. ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் இதற்கு எதிராக வழக்கு தொடரவில்லை. மனுதாரருடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்துக்காகவும் இதுபோல குற்றம்சாட்டப்படுகிறது என்று வாதிட்டாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு (செப்.1) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT