காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
வானிலை மைய அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: முழு விவரம்!
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, வையாவூர்,ஒலி முகமது பேட்டை, கீழம்பி,தாமல், மகரல், வாலாஜாபாத், பரந்தூர், ராஜகுளம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மழை பெய்து வருவதன் காரணமாக பல்வேறு பணிகள் காரணமாக வெளியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பாதித்து அவதிப்பட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.