தமிழ்நாடு

ஆளுநரை குறை சொல்லவில்லை: அமைச்சர் ரகுபதி

DIN

ஆளுநரை குறை சொல்லவே இல்லை, தாமதிக்கிறார் என்றே சொல்கிறோம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

6 வாரங்களில் ஒப்புதல் அளிக்க வேண்டிய சூழ்நிலையில், ஆளுநர் காலம் தாழ்த்தியதால் மசோதா காலாவதியாகிவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் ரகுபதியும் வியாழக்கிழமை ஆளுநரை சந்தித்து, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினார். 

பின்னர் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் இந்தியாவுக்கே முன்மாதிரியான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளோம். அவசரச் சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அவசரச் சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை. அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். 

ஆளுநரை குறை சொல்லவில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிக்கிறார் என்றே சொல்கிறோம். ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக இருக்கிறோம்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT