முகப்பு
தமிழ்நாடு

மதுரையில் பட்டாகத்தியை சுழற்றி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது!

மதுரையில் பட்டாகத்தியை சுழற்றி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:01 AM
தனிப்படை போலீசார் கைது செய்த அஜித்குமார்
பகிர்:

மதுரையில் பட்டாகத்தியை சுழற்றி ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

மதுரையைச் சேர்ந்த சில இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களுடன் விடியோ பதிவிட்டு வந்தனர். இதனடிப்படையில் மதுரையைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் சமீபத்தில் பெரிய வாளுடன் ரீல்ஸ் விடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அதில், சினிமா பாணியில் நடனம் ஆடி சட்டையிலிருந்து பட்டாகத்தியை எடுத்து மிரட்டுவது போல் விடியோ இருந்தது.

இதையடுத்து இது தொடர்புடைய அஜித் என்ற வாலிபரை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் புகார் எழுந்த நிலையில், அஜித்குமாரை காவலர்கள் தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாகினார்.

இந்நிலையில், தனிப்படை போலீசார் அஜித்குமார் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

அஜித் குமார் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →