தமிழ்நாடு

தென்காசியில் நாளை அரசு விழா! ரயிலில் செல்கிறார் ஸ்டாலின்

தென்காசி மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தென்காசிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணிக்கிறார். 

DIN

தென்காசி மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தென்காசிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணிக்கிறார். 

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடக்கிவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச. 8) தென்காசி செல்கிறார். 

இதையொட்டி இன்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 8.40 மணிக்கு புறப்படும் பொதிகை அதிவிரைவு ரயிலில் பயணிக்கவுள்ளார். செங்கோட்டை வரை செல்லும் இந்த ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும். 

தென்காசியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவிருக்கிறார். 

தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அவர் ரயிலில் பயணம் மேற்கொள்ளவுள்ளதை அடுத்து, எழும்பூர், தென்காசி ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT