தமிழ்நாடு

எங்கே சென்று கொண்டிருக்கிறது மாண்டஸ்?

DIN

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு கேளம்பாக்கம் அருகே கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழையும், பலத்த காற்றும் வீசியது.

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து நேற்றிரவு 10 மணியளவில் கேளம்பாக்கம் அருகே கரையை கடக்க தொடங்கியது.

சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

மேலும், இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கரையைக் கடந்துள்ள மாண்டஸ் புயலானது, கடலோர மாவட்டங்களில் கனமழையை கொடுத்துவிட்டு இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

வட தமிழகத்தில் மேற்கு - தென் மேற்காக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரமாக, மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

வேலூரிலிருந்து 140  கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு வட கிழக்கில் கிருஷ்ணகிரிக்கு அருகே நகர்ந்து கொண்டிருந்தது. இதனால், அப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இது மேலும் மேற்கு - தென்மேற்காக நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கும் என்றும், அடுத்த 6 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

130 ஆண்டுகளில் 13-ஆவது புயல்

மாண்டஸ் புயல் தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவா் பாலச்சந்திரன் கூறுகையில், ‘கடந்த 1891 முதல் 2021 வரையிலான 130 ஆண்டு காலத்தில் சென்னை, புதுச்சேரி இடையே 12 புயல்கள் கரையைக் கடந்துள்ளன’ என்றாா்.

மாண்டஸ் புயலும் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்துள்ள நிலையில், அது சென்னை- புதுச்சேரி இடையே கரையைக் கடந்த 13-ஆவது புயலாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

SCROLL FOR NEXT