திருச்சி ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.