முகப்பு
மின்சாரம் பாய்ந்து பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.11.67 லட்சம் இழப்பீடு
தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.11.67 லட்சம் இழப்பீடு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை 2014 செப்டம்பர் முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
மின்சாரம் பாய்ந்து பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.11.67 லட்சம் இழப்பீடு
பகிர்:

மதுரை: மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை 2014 செப்டம்பர் முதல் 6 சதவீத வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவகங்கையை சேர்ந்த செல்வம் மின் விபத்தில் உயிரிழந்த தனது மகன் முத்துகிருஷ்ணனின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார், மனுதாரரின் மகன் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கடந்த 2014 ஆகஸ்ட் 10ஆம் தேதி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அருகில் விழுந்த பந்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அங்கிருந்த இரும்பு வேலியை தொட்டபோது மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ளார்.

மின் கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாததே தனது மகனின் இறப்புக்கு காரணம் என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால்  மின்வாரியம் தரப்பில் மின் கம்பம் ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டது. இதில் மின்வாரியத்தின் அலட்சியம் எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து தரப்பில் இது கடவுளின் செயல், நாங்கள் பொறுப்பேற்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பொறுத்தவரை ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதே மின் விபத்து ஏற்பட்டு மனுதாரரின் மகன் உயிரிழக்கக் காரணம். ஆகவே மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை 2014 செப்டம்பர் முதல் 6 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர் 12 வாரங்களில் வழங்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி விஜயகுமார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →