தமிழ்நாடு

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள்: ரூ. 115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

DIN

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பேருந்து நிலையங்கள் புனரமைக்கும் பணி மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 

மாநகராட்சிகளான திரூப்பூரில் ரூ. 26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அதுபோல கூடலூர், அரியலூர், வடலூர், வேதாரண்யம், வேலூர், புதுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி ஆகிய 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT