முகப்பு
தமிழ்நாடு

'உப்பெனா'  பட விவகாரம்: நடிகர் விஜய் சேதுபதி மீதான வழக்கு ரத்து

'உப்பெனா'  பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 19 டிசம்பர், 2022 at 1:37 PM
கோப்புப்படம்
பகிர்:

'உப்பெனா'  பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெலுங்கு படமான 'உப்பெனா' படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் விஜய் சேதுபதி வாங்கியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 'உப்பெனா' என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று, அவர் மீதான வழக்கை மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Advertisement

தனது கதையை திருடி 'உப்பெனா' படம் தெலுங்கில் உருவாக்கம் என டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குநர் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.