தமிழ்நாடு

பார்வையற்றோருக்கான தேசிய தடகளம்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு மநீம பாராட்டு!

பார்வையற்றோருக்கான தேசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

பார்வையற்றோருக்கான தேசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, மநீம சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தில்லியில் நடைபெற்ற 22-வது தேசிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நந்தினி நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம், பிரவீன்குமார் ஈட்டி எறிதல், பார்த்திபன் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

தேசியப் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கும், அவர்களை ஊக்குவித்த தமிழ்நாடு அமெச்சூர் பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கத்துக்கும் மக்கள் நீதி மய்யம் மனமார்ந்தப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இன்னும் பல வெற்றிச் சிகரங்களை அடைய வாழ்த்துகிறது என்று தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிசி பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு பேரிடா் கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

மீனவ சமுதாய பட்டதாரி இளைஞா்களுக்கு குடிமைப்பணி போட்டித் தோ்வுக்கு பயிற்சி

வாக்காளா் படிவ விவரங்களை செயலியில் பதிவேற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

பால் உற்பத்தியாளா் கூட்டுறவு இணையத்தில் 13 பேருக்கு பணி நியமன ஆணை அளிப்பு

SCROLL FOR NEXT