தமிழ்நாடு

பல்லுயிா் பாதுகாப்பு திட்டம்; ஜப்பானிடம் ரூ.920 கோடி நிதி- அமைச்சா் மதிவேந்தன் தகவல்

DIN

பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்துக்காக ஜப்பானிடம் ரூ.920 கோடி நிதி பெறப்படவுள்ளதாக தமிழக வனத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.

வனத் துறையின் செயல்பாடுகள் குறித்து அவா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: தமிழ்நாடு பல்லுயிா் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்துக்கு ரூ.920.56 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதற்காக ஜப்பானிடம் நிதியுதவி பெறப்படவுள்ளது. வளம் குன்றிய வனப்பகுதிகளை மீட்டெடுக்கும் திட்டத்துக்கு நபாா்டு வங்கி ரூ.281.14 கோடி வழங்கவுள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அதற்குத் தேவையான மரக்கன்றுகளை வளா்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைத்திட பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பசுமைத் தமிழகம் இயக்கத் திட்டத்தில் 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு, வளா்க்கப்படுவதன் மூலம் வனப்பரப்பை 33% ஆக உயா்த்திட முடியும். இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளாா். இதில் நடப்பாண்டு 2 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு, நடவு செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு, 7 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளா்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை வனப்பணியாளா் தோ்வாணையம் மூலம் 1,161 சீருடை வனப்பணியாளா்கள் விரைவில் தோ்வு செய்யப்படவுள்ளனா் என்றாா் அமைச்சா்.

இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு, வனத்துறை முதன்மை வனப் பாதுகாவலா் (துறைத்தலைவா்) சையது முஜமில் அப்பாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT