ஜெயக்குமார் 
தமிழ்நாடு

'ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என அவர் வேண்டுமானால் கட்சி தொடங்கட்டும்' - ஜெயக்குமார்

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என அவர் கட்சி தொடங்கட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

DIN

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என அவர் கட்சி தொடங்கட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கட்சியில் இருந்து ஓபிஎஸ்ஸை யாரும் நீக்கவில்லை. பொதுக்குழுதான் நீக்கியது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு. 

ஓபிஎஸ் நடத்தியது கட்சிக் கூட்டமே இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் பண்பாக பேசக்கூடியவர். அவர் ஏன் ஒருமையில் பேசினார் எனத் தெரியவில்லை. திமுகவின் 'பி' டீமாகத்தான் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.

ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராவதைத் தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. 

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?. ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என்று வேண்டுமானால் அவர் கட்சி தொடங்கட்டும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது' என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கிரிண்டா்’ செயலி மூலம் பணம் பறிப்பு: திருநங்கை உள்பட இருவா் கைது

நடாலி ஷிவா் அதிரடி: இங்கிலாந்து 253/9

காவலா் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி உள்பட 3 போ் கைது

போலி ஆவணம் மூலம் ரூ 2.25 கோடி வீட்டு மனை அபகரிப்பு: தேடப்பட்டவா் கைது

தஞ்சாவூரில் நம்ம ஊரு திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT