தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழா: அமைச்சர் தா.மோ. அன்பரசன்  தொடக்கி வைத்தார் 

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.
                                 
காஞ்சிபுரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் முதல் முதலாக புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் ஜனவரி 2ஆம் தேதி வரை தொடர்ந்து பத்து நாள்களுக்கு நடைபெறுகிறது. 

புத்தகத் திருவிழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கா. சுந்தர், சிவிஎம்பி எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி வரவேற்று பேசினார். பபாசி தலைவர் எஸ் வைரவன் விழாவை அறிமுகம் செய்து வைத்து பேசினார். புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

தொடக்க விழாவில் எஸ்.பி.எம். சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவை முன்னிட்டு வரும் இரண்டாம் தேதி வரை தினசரி இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் பொது நூலக துறையும் இணைந்து செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT