கோப்புப் படம் 
தமிழ்நாடு

சென்னை மெட்ரோ 2ம் கட்டப் பணி: ரூ.206.64 கோடி ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு ரூ.206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

DIN


சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு ரூ.206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழித்தடம் 5-ல் சி.எம்.பி.டி. முதல் மாதவரம் வரை 10.1 கி.மீ. தூரத்துக்கு இருப்புப் பாதை, இதர பணிகள் நடைபெற உள்ளன.

ஜப்பான் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சில தனியார் கட்டுமான நிறுவனங்களுடன் (KEC-VNC-JV) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 5-இல் 16 மெட்ரோ ரயில் நிலைய இருப்பு பாதைகளில் தண்டவாளங்கள் அமைப்பது மற்றும் அதன் தொடர்பான அனைத்து வகையான பணிகளும் இதில் அடங்கும்.

உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள்

சிஎம்பிடி, அண்ணாநகர் கேவி மெட்ரோ, திருமங்கலம் சந்திப்பு மெட்ரோ, அண்ணா நகர் மேற்கு மெட்ரோ, ரெட்டேரி சந்திப்பு மெட்ரோ, சாஸ்திரி நகர் மெட்ரோ, மாதவரம் பேருந்து முனையம் மெட்ரோ, வேல்முருகன் நகர் மெட்ரோ, மஞ்சம்பாக்கம் மெட்ரோ ஆகியவை உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள்.

சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள்

வில்லிவாக்கம் எம்டிஎச் சாலை மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து முனையம் மெட்ரோ, வில்லிவாக்கம் மெட்ரோ, ஸ்ரீனிவாசா நகர் மெட்ரோ, கொளத்தூர் சந்திப்பு மெட்ரோ மற்றும் மாதவரம் பணிமனை மெட்ரோ ஆகியவை சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள்

இந்நிலையங்கள் வழியாக செல்லும் இடங்களுக்கான 10.1 கி.மீ நீளத்திற்கு இருப்புப்பாதை மற்றும் இதர பணிகளுக்காக ரூ. 206.64 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

வீட்டு வாடகைப்படி குறைப்பு: கால்நடைத் துறை அலுவலகம் முற்றுகை

இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?

தனுஷ்கோடி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய காபி தூள், ஷாம்பு பாக்கெட்டுகள்

அரசின் குறைகளை சுட்டிக்காட்டினால் கைது நடவடிக்கை: ஆா்.பி.உதயகுமாா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT