வியதீபாதம் நாளை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் சிதம்பரம் தேரோடு வீதியில் வலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். 
தமிழ்நாடு

வியதீபாதம்: நடராஜர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

வியதீபாதம்  நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் தேரோடும் நான்கு வீதியில் வலம் வந்து நடராஜ பெருமானை தரிசித்தனர்.

DIN

சிதம்பரம்:  வியதீபாதம்  நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் தேரோடும் நான்கு வீதியில் வலம் வந்து நடராஜ பெருமானை தரிசித்தனர்.

மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக அமைகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மார்கழியில், அதிகாலைப் பொழுதாகிய பிரம்ம முகூர்த்த நேரத்தில், மிகச் சிறப்பாக திருப்பள்ளியெழுச்சி காலம் நடைபெறும்.

இந்த மார்கழி மாதத்தில் (பஞ்சாங்கத்தில் ஒரு அங்கமாகிய) வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் ஸ்ரீ சித்ஸபேசரை தரிசனம் செய்வது சர்வ பாவங்களையும் நீக்கி, பெரும் புண்ணியங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது. 

கோயில் உள்பிரகாரத்தில்  வலம் வந்த பக்தர்கள்

மார்கழி மாதத்தின் அனைத்து நாள்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுர்) வியதீபாத நாளில் தரிசனம் செய்தால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எனவே, வியதீபாதம் நாளை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சிதம்பரம் தேரோடு வீதியில் வலம் வந்தும், கோயில் உள்பிரகாரத்திலும் வலம் வந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானை தரிசித்தனர்.

நான்கு வீதிகளிலும் மக்களுக்கு பால் மற்றும் அன்னதானம் பக்தர்களால் வழங்கப்பட்டது.

சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT