மேட்டுப்பாளையம்: 85 வயது மூதாட்டியுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்
மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முகமது அலி என்பவர், 85 வயது மூதாட்டியான தனது தாயாருடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முகமது அலி என்பவர், 85 வயது மூதாட்டியான தனது தாயாருடன் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
இதையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குள்பட்ட 19வது வார்டு உறுப்பினர் முகமது அலி (சுயேச்சை ) இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவரது வேட்பு மனுவை முன்மொழிய தனது 85 வயது தாயாரான பாத்திமா பீவியுடன்வந்திருந்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.