தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா: பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு

DIN

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.

இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, கடந்த முறை நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக ஆளுநர் தெரிவித்ததற்கு, பாஜக கடந்தமுறையும் ஆதரவிக்கவில்லை என அக்கட்சியின் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரனின் பேசுகையில் குறிக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடந்த முறை வெளிநடப்பு செய்த நிலையில், பேரவையில் இருக்கும் உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, விவாதத்தில் பங்கேற்காமல் பேரவையிலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT