தமிழ்நாடு

தில்லி முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமனம்

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

DIN

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வெளியிட்டாா். தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநராக அவா் பணியாற்றி வந்தாா்.

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக இருந்த ஜக்மோகன் சிங் ராஜூ, விருப்ப ஓய்வு பெற அனுமதி கோரியிருந்தாா். அவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் பணியாற்றிய உறைவிட ஆணையா் பொறுப்பு காலியாக இருந்தது. இந்தப் பொறுப்புக்கு அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எப்போது திருந்(த்)தப் போகிறோம்?

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT